போர் பதற்றம் எதிரொலி; PBKS vs MI போட்டி இடமாற்றம்

8 வைகாசி 2025 வியாழன் 14:14 | பார்வைகள் : 130
PBKS மற்றும் MI க்கு இடையேயான ஐபிஎல் போட்டி இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் பகுதிகளில், உள்ள 9 பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இதனையடுத்தும் இரு நாடுகளுக்கிடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இதன் காரணமாக எல்லை பகுதிகளில் இந்திய ராணுவம் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.
மேலும், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள தரம்சலா உள்ளிட்ட விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஐபிஎல் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறுமா என சந்தேகம் எழுந்தது.
பஞ்சாப்பின் தர்மசாலா மைதானத்தில், மே 11 ஆம் திகதி ,மும்பை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி நடைபெற இருந்தது.
விமான நிலையம் மூடப்பட்டுள்ள நிலையில், மும்பை வீரர்கள் அங்கு வருவதில் சிக்கல் எழுந்துள்ளதால், மே 11 ஆம் திகதி தர்மசாலா மைதானத்தில் நடைபெற இருந்த போட்டி, அகமதாபாத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
குஜராத் கிரிக்கெட் சங்க செயலாளர் அனில் படேல், இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.