விஜய்சேதுபதி படத்தில் யோகிபாபு..

8 வைகாசி 2025 வியாழன் 17:30 | பார்வைகள் : 137
விஜய் சேதுபதி நடித்த ஒரு படத்தில் யோகி பாபு காமெடி கேரக்டரில் நடித்துள்ள நிலையில், அந்த படத்திற்காக அவர் 60 நாட்கள் நடித்து கொடுத்துள்ளார். அந்த படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை வரும் ஒரு முக்கிய கேரக்டரில் அவர் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
விஜய் சேதுபதி நடிப்பில், ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவான "ஏஸ்" என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், தற்போது விறுவிறுப்பாக தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், இந்த படத்தில் யோகி பாபு முதலில் காமெடி கேரக்டராகவே நடிப்பதாக இருந்தாலும், பின்னர் அவரது கேரக்டருக்கு முக்கியத்துவம் அதிகரிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 60 நாட்கள், அவர் இந்த படத்திற்காக கால்சீட்டுகள் ஒதுக்கி நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தின் கதையில் ஆரம்பம் முதல் இறுதி வரை யோகி பாபுவின் கேரக்டர் பயணம் செய்யும் என்றும், அவர் நடித்திருக்கும் பாத்திரம் ஒரு ஆழமான உணர்ச்சி கொண்ட கேரக்டராக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இதனால், இந்த படத்தில் யோகி பாபுவின் ரோல், விஜய் சேதுபதியின் கேரக்டருக்கு சமமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த படத்தில் ருக்மணி வசந்த், அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆறுமுக குமார் இயக்கத்தில், 7Cs என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் ஜஸ்டின் பிரபாகரன் பாடல்களை கம்போஸ் செய்துள்ளார். மேலும் சாம் சிஎஸ் இந்த படத்தின் பின்னணி இசையும் அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.