தொடருந்து பெட்டிகளுக்கு இடையே மறைந்திருந்து - 500 கி.மீ பயணித்த நபர்!!

8 வைகாசி 2025 வியாழன் 16:32 | பார்வைகள் : 868
நபர் ஒருவர் தொடருந்துக்கு வெளியே இரு பெட்டிகளுக்கும் இடையே மறைந்திருந்து 500 கிலோமீற்றர் தூரம் பயணித்துள்ளார்.
54 வயதுடைய ஒருவர் இன்று வியாழக்கிழமை காலை பரிசில் இருந்து புறப்பட்ட TGV ஒன்றில் ஏறி இரு பெட்டிகளுக்கிடையே மறைந்துகொண்டார். Gare de Lyon நிலையத்தில் இருந்து புறப்பட்ட குறித்த தொடருந்து எங்கேயும் நிற்காமல் 500 கி.மீ பயணித்துள்ளது. இறுதியாக அவர் Valence (Drôme) நிலையத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டார். மிக கடுமையான உறை குளிரில் சிக்கி உடல் விறைத்த நிலையில் இருந்துள்ளார்.
பின்னர் அவர் தொடருந்து நிலைய மருத்துவர்களால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பயணச்சிட்டை வாங்க பணமில்லை என மட்டும் அவர் தெரிவித்ததாகவும், பெயர் விபரங்களை தெரிவித்த மறுத்ததாகவும் அறிய முடிகிறது. தொடருந்து 300 கி.மீ வேகத்தில் பயணித்து பரிசில் இருந்து கிட்டத்தட்ட இரண்டு மணிநேரத்தில் Valence நிலையத்தைச் சென்றடைந்துள்ளது.