Paristamil Navigation Paristamil advert login

'யூரோ கிண்ணம்_2000' - வெற்றிச் சரித்திரம்!

 'யூரோ கிண்ணம்_2000' - வெற்றிச் சரித்திரம்!

2 ஆடி 2016 சனி 10:00 | பார்வைகள் : 18023


1984ஆம் ஆண்டு யூரோ கிண்ண போட்டிகளில், தனது முதல் வெற்றியை ருசித்த பிரான்ஸ்... அதன் பின்னர் 2000ஆம் ஆண்டில்.. சொல்லி அடித்தது கில்லி!! 
 
2000ஆம் ஆண்டின் போட்டிகள் பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து ஆகிய இரு நாடுகளிலும் இடம்பெற்றன. எட்டு நகரங்களில், எட்டு மைதானங்களில் போட்டிகள் இடம்பெற்றன . ஜூன் மாதம் 10ம் திகதி ஆரம்பித்த போட்டிகள், ஜூலை 2ம் திகதி முடிவடைந்தது! இந்த போட்டிகளில், இத்தாலியுடன் மோதி, பிரான்ஸ் அபார வெற்றி பெற்றது. ஜூலை, 2ம் திகதி...அதாவது இன்றைய தினத்தில்!!
 
2000 ஆம் ஆண்டு போட்டிகளில் இருந்து சில தகவல்கள்!!
 
*இப்போட்டிகளின் போது மொத்தம் 16 அணிகள் விளையாடியிருந்தன. மொத்தம் 31 போட்டிகள் இடம்பெற்றன. 
 
*அதுவரை காலமும் இல்லாமல், இரண்டு நாடுகளில் (பெல்ஜியம், நெதர்லாந்து) முதன் முறையா போட்டிகள் நடத்தப்பட்டன. 
 
*இறுதிப்போட்டியின் போது, இத்தாலியுடன் ஆக்ரோஷமாக மோதிய பிரான்ஸ்... 2-1 எனும் செட் கணக்கில் 'கோல்டன் கோல்' அடித்து அபார வெற்றி பெற்றது! 
 
*மொத்தமாக இடம்பெற்ற 31 போட்டிகளில், 85 கோல்கள் விளாசப்பட்டன. Top scorer(s) நெதர்லாந்தை சேர்ந்த Patrick Kluivert மற்றும்  Republic of Yugoslavia வை சேர்ந்த Savo Milošević இருவரும் தலா 5 கோல்கள் அடித்தார்கள்.
 
*மொத்த போட்டிகளையும் 1,122,833 மக்கள் நேரடியாக பார்வையிட்டிருந்தார்கள். அண்ணளவாக ஒரு போட்டிக்கு 36,220 மக்கள் படி!!
 
*மார்செய் நகரில் பிறந்த Zinedine Yazid Zidane இந்த வருடத்தின், சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இவரின் செல்லப்பெயரான 'Zizou' எனும் பெயரை பிரெஞ்சு ரசிகர்கள் தாரக மந்திரமாக சொல்லித்திரிந்தார்கள் என ஒரு தனி வரலாறு உண்டு.
 
*'Football without frontiers' என தொடங்கும் பாடலை இந்த வருடத்து உத்தியோகபூர்வ 'தேசிய கீத'மாக உருவாக்கினார்கள். ஸ்வீடன் நாட்டைச்சேர்ந்த E-Type என்பவர் அதை உருவாக்கினார். 
 
2000ம் ஆண்டு ஈட்டிய வெற்றிக்களிப்பை மீண்டும் தருமா பிரெஞ்சு அணி??!!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்