புதிய போப்பாண்டவரை வவேற்கும் தலைவர்கள்!

8 வைகாசி 2025 வியாழன் 20:51 | பார்வைகள் : 841
புதிய போப்பாண்டவராக அமெரிக்காவின் ரொபேரட் பிரோன்சிஸ் பிரெவோஸ்ட் (Robert Francis Prevost) தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவரிற்கு Léon XIV என போப்பாண்டவரிற்காபெயர் சூட்டப்பட்டுள்ளது.
«புதிய போப்பாண்டவர் லியோன் 14 அமைதியையும் நம்பிக்கையையும் கொண்டுவருவர் என எதிர்பார்க்கிறேன்.»
என புதிய போப்பாண்டவரிற்கும் கத்தோலிக்க மக்களிற்கும் ஒரு சகோதரத்துவ செய்தியை எமானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
«பதினான்காம் லியோன், தனது முதல் வார்த்தைகளிலிருந்தே, உலகம் எதிர்பார்க்கும் அமைதியைப் பற்றிப் பேசினார். அவரது முன்னோடி, இரண்டாம் ஜோன் போல் செய்தது போல, அவரது வார்த்தைகளும் செல்வாக்கும் இந்த லட்சியத்தை உயர்த்தட்டும்»
என மரின் லூப்பன் புதிய போப்பாண்டவரின் எதிர்கால நடவடிக்கையில் நம்பிக்கை வைத்துள்ளார்.