யூரோ கிண்ணம்!! - தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு!!

1 ஆடி 2016 வெள்ளி 10:30 | பார்வைகள் : 22611
யூரோ கிண்ண போட்டிகளுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது அறிந்ததே. FIFA உலகக்கோப்பைக்கு அடுத்ததாக இருக்கும் மிகப்பெரும் Tournament யூரோ கிண்ண போட்டிகள் ஆகும். போட்டிகள் நடைபெறும் நாடு, இடம், விளையாடும் அணிகள் தேர்வாகும் அதே சமயத்திலேயே... போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய தொலைக்காட்சிகள் போட்டிபோட ஆரம்பித்துவிடும். தொலைக்காட்சி ஒளிபரப்புக்கான உரிமம் போட்டி ஏற்பாட்டாளர்களுக்கு மிகப்பெரும் லாபத்தை ஈட்டிக்கொடுக்கும் என்பதில் துளியும் ஐயமில்லை.
இங்கே ஐரோப்பாவில் இருக்கும் சகல நாடுகளிலும் ஒவ்வொரு தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு செய்கிறது. அதை தவிர்த்து உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் உள்ள தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பபடுகிறது.
பிரான்சில் TF1 தொலைக்காட்சி, M6 தொலைக்காட்சி, beIN தொலைக்காட்சி என மொத்தம் 3 தொலைக்காட்சிகள் போட்டிகளை நேரடியாக ஒளிபரப்புகின்றன. இந்தியாவில் SONY SIX தொலைக்காட்சியும், அமெரிக்காவில் ESPN தொலைக்காட்சியும் ஒளிபரப்புகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் வானொலிகளில் Radio France பிரான்சிலும், EBU ஐரோப்பா முழுவதும், தொடர்ந்து ஜெர்மனி, போர்த்துக்கல் போன்ற நாடுளில் உள்ள வானொலிகளிலும் நேரடி வர்ணனைகளோடு ஒலிபரப்பப்படுகின்றன.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025