"César Award" : பிரெஞ்சு சினிமாவுக்கான கெளரவம்!
30 ஆனி 2016 வியாழன் 10:30 | பார்வைகள் : 19529
பிரெஞ்சு சினிமாவுக்காக வழங்கப்படும் மிகச்சிறந்த பெருமைமிகு விருதுகளில் ஒன்று César Award. வருடா வருடம் வழங்கப்படும் இந்த விருது குறித்த சில தகவல்கள் உங்களுக்காக!
*பிரெஞ்சு சினிமாவுக்காக வழங்கப்படும் César Award, இந்த 2016ஆம் ஆண்டுடன் தனது 40 வயதை பூர்த்தி செய்கிறது. 1976 ஆம் ஆண்டு, முதல் விருது வழங்கும் விழாவில் Le Vieux Fusil (பழைய துப்பாக்கி) எனும் திரைப்படம் சிறந்த படமாக தெரிவு செய்யப்பட்டது. இந்த வருடம் (2016) வழங்கப்பட்ட விருதில் Fatima எனும் திரைப்படம் சிறந்த திரைப்படமாக தெரிவுசெய்யப்பட்டது.
*ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி மாதத்தில் இந்த விருது வழங்கும் விழா நடைபெறும். திரைப்படம் தொடர்பான 12 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும்! (10 கிளை பிரிவுகளுடன் சேர்ந்து மொத்தம் 22 விருதுகள்) இந்த விருது வழங்கலுக்கு பிரான்சின் கலாச்சார மன்றமும் உதவி புரிகிறது.
*இந்த விருது வழங்கும் 'ஐடியா'வை உருவாக்கியவர் Georges Cravenne ஆகும். இவரே பிரெஞ்சு மேடை நாடகங்களுக்காக வழங்கப்படும் உயரிய விருதான Molière விருதையும் உருவாக்கியவர்.
*வருடா வருடம் Honorary César எனும் பெயரில் சிறப்பு விருதொன்றும் வழங்கப்படுகிறது. சிலவேளைகளில் இது ஒரே வருடத்தில் இரண்டு அல்லது மூன்று நபர்களுக்கு கூட வழங்கப்படும்.
*1990 ஆம் ஆண்டு, Cyrano de Bergerac எனும் திரைப்படம் மொத்தம் 13 பிரிவுகளில் போட்டியிட்டு, அதில் 10 விருதுகளை பெற்றுக்கொண்டது. அதேபோல், 1980 ஆம் ஆண்டு The Last Metro எனும் திரைப்படம், 12 பிரிவுகளில் போட்டியிட்டு 10 விருதுகளை பெற்றுக்கொண்டது. வேறு எந்த திரைப்படமும் எந்த வருடங்களிலும் இப்படி விருதுகளை குவித்ததில்லை!
*Roman Polanski எனும் பலே கில்லாடி இயக்குனர் நான்கு முறை பரிந்துரை செய்யப்பட்டு, நான்கு முறையும் சிறந்த இயக்குனருக்கான விருதை தட்டிச்சென்றார்.
* நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல்முகம் கொண்ட Gérard Depardieu என்பவர் தான் அதிக தடவை வெவ்வேறு பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுந்தவர் ஆகும். மொத்தமாக 17 முறை பரிந்துரை செய்யப்பட்டுந்தார். ஆனால் அதில் இரண்டே தடவைகள் மாத்திரம் விருது பெற்றுக்கொண்டார்.