பிரித்தானியாவின் புதிய கட்டுப்பாடு- வெளிநாட்டவர்களுக்கு புதிய சிக்கல்

9 வைகாசி 2025 வெள்ளி 10:16 | பார்வைகள் : 265
வெளிநாட்டவர்களுக்கு இனி பிரித்தானியாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி வேண்டுமானால், அவர்களுக்கு சரளமாக ஆங்கிலம் பேசத் தெரிந்திருப்பது கட்டாயம் என்று கூறும் விதி ஒன்று விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளதற்குக் காரணம் முந்தைய கன்சர்வேட்டிவ் அரசுதான் என குற்றம் சாட்டியிருந்தார் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்.
ஆனால், அவரது ஆட்சியிலேயே புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாக தற்போது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
ஆகவே, புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகள் எடுக்க திட்டமிட்டுள்ளார் ஸ்டார்மர்.
அதன்படி, எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளில் ஒன்றாக, வெளிநாட்டவர்களுக்கு இனி பிரித்தானியாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி வேண்டுமானால், அவர்களுக்கு சரளமாக ஆங்கிலம் பேசத் தெரிந்திருப்பது கட்டாயம் என்று கூறும் விதி ஒன்று விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
வெளிநாட்டவர்கள், சமூக, கல்வி மற்றும் தொழில்முறை நோக்கங்களுக்காக, தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு தயங்கிக்கொண்டிருக்காமல், சரளமாகவும் தன்னிச்சையாகவும் ஆங்கிலத்தில் பேசத் தெரிந்திருக்கவேண்டும் என்கிறது பிரித்தானிய உள்துறை அலுவலகம்.
புதிய புலம்பெயர்தல் விதிகளின் கீழ், மொழிப்புலமை தொடர்பான இந்த விதிகள் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.