யாழில் மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்

9 வைகாசி 2025 வெள்ளி 11:16 | பார்வைகள் : 243
யாழ்ப்பாணம் - ஏழாலை கிழக்கு பகுதியில் விவசாய காணியில் வேலை செய்து கொண்டிருந்த இளைஞன் இன்று நண்பகல் மின்னல் தாக்கி உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் ஏழாலை கிழக்கை சேர்ந்த 39 வயதுடைய குணரட்ணம் குமரன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுண்ணாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.