Paristamil Navigation Paristamil advert login

சிலமதக் காரணங்களினால் ஒன்றாரியோவில் தட்டம்மை நோய் பரவுகிறது – டக் ஃபோர்ட்

சிலமதக் காரணங்களினால் ஒன்றாரியோவில் தட்டம்மை நோய் பரவுகிறது – டக் ஃபோர்ட்

9 வைகாசி 2025 வெள்ளி 13:25 | பார்வைகள் : 181


ஒன்டாரியோமாகாணத்தில் தட்டம்மை நோய் பரவலுக்கான முக்கியக்காரணம், சில சமூகங்கள் மதகாரணங்களுக்காக குழந்தைகளுக்கு தடுப்பூசி போட மறுப்பது தான்என முதல்வர் டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.

நீங்கள்உங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடவில்லை என்றால், இந்த வைரஸ் விரைவாகபரவத் தொடங்கும். எனவே அனைவரும், எல்லோரும்தடுப்பூசி போட வேண்டும்,” எனஅவர் வலியுறுத்தியுள்ளார்.

ஒன்டாரியோமாகாணத்தில் தட்டம்மை வைரஸ் பரவல் திடீரென அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, தமது அரசு முழுமையானநடவடிக்கைகள் எடுத்து வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.

இந்தநோய்த் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் முழு வீச்சில் செயற்பட்டுவருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

1.5 லட்சம்தடுப்பூசிகள் பொதுச் சுகாதார நிறுவனங்கள் வழியாக வழங்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் தடுப்பூசி போட ஊக்கப்படுத்த 20 லட்சம்டாலர்கள் விளம்பரத்திற்காக செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள்வலியுறுத்துகையில், தடுப்பூசி செலுத்துவது எளிமையான, ஆனால் அவசியமான முடிவாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார். 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்