Paristamil Navigation Paristamil advert login

இன்ஸ்டாகிராமில்  புதிய அப்டேட்

இன்ஸ்டாகிராமில்  புதிய அப்டேட்

5 புரட்டாசி 2023 செவ்வாய் 08:57 | பார்வைகள் : 8039


10 நிமிடங்கள் வரையிலான ரீல்ஸ்களை அப்லோட் செய்து கொள்ளும் புதிய வசதியை இன்ஸ்டாகிராம் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமூக வலைதளங்களில் தற்போது முன்னணி இடத்தில் இருக்கும் இன்ஸ்டாகிராமில் போட்டோ மற்றும் வீடியோக்களை உள்ளடக்கிய ஸ்சார்ட் வீடியோ செக்மெண்ட் மிகவும் பிரபலமானது.

இந்த ஸ்சார்ட் வீடியோ செக்மெண்ட் மூலமாக இன்ஸ்டா யூஸர்கள் ஒன்றரை நிமிடங்கள் (அதாவது 90 நொடிகள்) வரையிலான ரீல்ஸ்களை அப்லோட் செய்து கொள்ளலாம்.

இந்நிலையில் இனி அதிகபட்சமாக 10 நிமிடங்கள் வரையிலான வீடியோகளை இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்களாக அப்லோட் செய்து கொள்ளலாம் என்ற புதிய அப்டேட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இதற்கான வேலைகளில் இன்ஸ்டாகிராம் செயலியின் தாய் நிறுவனமான மெட்டா தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த தகவல் இன்ஸ்டாகிராம் அல்லது மெட்டா நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தபடாத நிலையிலும் இன்ஸ்டாகிராம் போட்டோ மற்றும் வீடியோ தளங்களுக்கான முன்னணி தளமாக இருக்க வேண்டும் என்று கருதுவதால் இந்த புதிய நடைமுறை விரைவில் இன்ஸ்டாகிராம் நடைமுறைக்கு கொண்டு வரலாம் என்று பிரபல் டெவலப்பரான அலெஸாண்ட்ரோ பலுஸி கண்டறிந்துள்ளார்.

ஒருவேளை இன்ஸ்டாகிராம் 10 நிமிட ரீல்ஸ்களை அப்லோட் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தினால் யூடியூப்-ன் Shorts வீடியோக்களுக்கு போட்டி என்பதில் இருந்து விலகி, யூடியூப் வீடியோக்களுக்கு போட்டி என்ற நிலைக்கு இன்ஸ்டாகிராம் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்