எரிசக்தி காசோலை - உதவித் தொகை குறையுமா? - அமைப்புகளின் கவலை!

6 ஆனி 2025 வெள்ளி 13:21 | பார்வைகள் : 1610
ஏற்கனவே 41.5% உயர்ந்துள்ள மின்சாரம், ஆனால் எரிசக்தி காசோலையின் (chèque énergie) மதிப்பு உயரவில்லை என பல அமைப்புகள் கவலை தெரிவிக்கின்றன.
2025 இல் புதிய விதிமுறைகள் காரணமாக, உதவித் தொகை பெறுவோரின் எண்ணிக்கையும், உதவித் தொகையின் அளவும் குறையும் என அவர்கள் எச்சரிக்கின்றனர்.
முன்பு, காசோலை வீட்டில் இருப்பவர்களின் எண்ணிக்கையை பொருத்து வழங்கப்பட்டது. இப்போது, மின்சாரம் வாங்கும் நபரின் குடும்ப வரி (foyer fiscal) அடிப்படையில் வழங்கப்படும். இதனால் சேர்ந்து வசிப்பவர்கள், மற்றவரின் வீட்டில் தங்குவோர் போன்றோர் இதனைத் தவறவிட வாய்ப்பு அதிகம்.
2024 இல் இதற்கான கண்காணிப்பு முறையை நீக்கியதில், 10 இலட்சம் மக்கள் உதவியை பெறவில்லை. மாற்றாக உருவாக்கப்பட்ட இணையம் மூலம் வழங்கப்பட்ட விண்ணப்ப வாய்ப்பை 18% மக்கள் மட்டுமே பயன்படுத்தி உள்ளனர்.
2025 இல், மீண்டும் காசோலை அனுப்பும் முறை மீண்டும் கொண்டு வரப்பட்டாலும், இது முழுமையான தொகையாக இருக்காது. அத்துடன் காசோலை நவம்பரில் மட்டும அனுப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வழக்கமான காலத்திலிருந்து 8 மாதம் தாமதமாகவே வழங்கப்பட உள்ளது.
பொது அமைப்புகள், உதவிகளை மறு மதிப்பீடு செய்து, மிகவும் தேவையுள்ளவர்களுக்கு உரிய அளவில் வழங்க அரசை வலியுறுத்துகின்றன.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1