ரஷ்ய ஜனாதிபதி தொடர்பில் புதிய தகவல் - உக்ரைன் உளவுத்துறைத் தலைவர்
5 புரட்டாசி 2023 செவ்வாய் 09:29 | பார்வைகள் : 6171
உக்ரைன் ரஷ்ய போர் பல மாதங்களை கடந்து இடம் பெற்று வருகின்றது.
இரு நாட்டு ஜனாதிபதிகளும் தங்களது கருத்துக்களை ஊடகங்களின் ஊடாக பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் உக்ரைன் உளவு துறையானது ரஷ்ய ஜனாதிபதி புடின் ஏற்கனவே உயிரிழந்திருக்கலாம் அல்லது உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறியுள்ளது.
ரஷ்யாவுக்கெதிரான ட்ரோன் தாக்குதல்கள் மற்றும் மாறுவேட ஆபரேஷன்களுக்கு பொறுப்பானவரான Major General Kyrylo Budanov என்னும் உக்ரைன் உளவுத்துறைத் தலைவர், கடைசியாக நாமெல்லோரும் நமக்கு நன்கு தெரிந்த புடினை 2022ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 26ஆம் திகதி பார்த்துள்ளோம்.
அதற்குப் பிறகு அவர் என்ன ஆனார், அவர் உயிருடன் இருக்கிறாரா, அல்லது மோசமான உடல் நிலையில் உள்ளாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீபத்தில் வெளியான வீடியோ ஆதாரம் ஒன்றை சுட்டிக் காட்டுகிறார் Budanov.
அந்த வீடியோவில், புடின் மணி பார்ப்பதற்காக தனது இடது கையில் கைக்கடிகாரத்தைத் தேடுவதைக் காணலாம்.
இடது கையில் கடிகாரத்தைக் காணாமல் அவர் குழப்பமடைவதை அந்த வீடியோவில் காணலாம்.
விடயம் என்னவென்றால், புடின் வலது கையில் கைக்கடிகாரம் கட்டும் பழக்கம் உடையவர்.
வீடியோவில் தோன்றும் புடின் இடது கையில் கடிகாரத்தைத் தேடுவதால், அது புடினே அல்ல, அது அவருடைய டூப் என்கிறார் Budanov.
அத்துடன், ஒவ்வொரு முறை தொலைக்காட்சியில் தோன்றும் போதும், அவரது முகத்தின் பல மாற்றங்கள் காணப்படுவதால் உண்மையாகவே தொலைக்காட்சியில் தோன்றுவது புடின் அல்ல, அவரது டூப் என்ற கருத்து பரவிவருகிறது.