Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேலுக்கு அனுப்பட்ட ஆயுதங்களை - கப்பலில் ஏற்ற மறுத்த ஊழியர்கள்!!

இஸ்ரேலுக்கு அனுப்பட்ட ஆயுதங்களை - கப்பலில் ஏற்ற மறுத்த ஊழியர்கள்!!

6 ஆனி 2025 வெள்ளி 20:28 | பார்வைகள் : 3011


இஸ்ரேலுக்கு அனுப்புவதற்காக மார்செய் துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்ட இராணுவத்தினருக்கு தேவையான பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை, கப்பலில் ஏற்ற மறுக்கப்பட்டதை அடுத்து, குறித்த கொள்கலன்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

காஸா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் மேற்கொண்டுவருவதைக் கண்டித்து மார்செய் துறைமுகத்தில் பணிபுரியும் CGT தொழிற்சங்கத்தைச் சேர்ந்த பணியாளர்கள் இந்த கொள்கலன்களை ஏற்ற மறுத்துள்ளனர். மொத்தமாக மூன்று கொள்கலன்கள் ஏற்ற மறுக்கப்பட்டன. 

மூன்று நாட்களாக மார்செய் துறைமுகத்தில் இந்த கொள்கலன்கள் காத்திருந்த நிலையில், இறுதியாக அவற்றை ஏற்றாமலே கப்பல் புறப்பட்டுள்ளது. கார்கோ நிறுவனம் குறித்த கொள்கலன்களை அதை அனுப்பியவர்களுக்கே திருப்பி அனுப்ப முடிவெடுத்துள்ளது.

“இனப்படுகொலைக்கு உடந்தையாக இருக்கக்கூடாது” என அவர்கள் ஒருமித்த கருத்தாக தெரிவித்தனர். 

ஆயுதப்படை அமைச்சகம் இது தொடர்பில் நேற்று வியாழக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில்,. “குறித்த இராணுவ தளபாடங்கள் பிரான்ஸ் மற்றும் அதன் நட்புறவு நாடுகளுடன் இணைந்து இஸ்ரேலுக்கு அனுப்பப்பட இருந்தது” என குறிப்பிட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்