பிரான்சின் உயர்தரப் பரீட்சைக்கு 8 வயது மாணவன் – புதிய சாதனை!

7 ஆனி 2025 சனி 06:00 | பார்வைகள் : 5491
2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பொதுப் பரீட்சையான baccaulauréat இற்கு 8 வயதுடைய மாணவன் ஒருவரே இதுவரை பதிவு செய்துள்ள இளம் வயதுடைய மாணவன் என கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
இவர் CE1 அல்லது CE2 படிக்கும் வயதுடையவர். இவர் தனிப்பட்ட மாணவனாக (candidat libre) ஜூன் 16 ஆம் தேதி philosophie தேர்வுடன் ஆரம்பமாகும் தேர்வுக்கு பதிவு செய்துள்ளார்.
ஏற்கனவே கடந்த வருடமும் சாதனை!
2024-ல், 9 வயதுடைய மாணவி ஒருவர் (Strasbourg கல்வி வட்டத்தில்) இதேபோன்ற சாதனை செய்தார், ஆனால் தேர்வில் தோல்வியடைந்தார்.
2023-ல், ஏநசளயடைடநள வட்டத்தில் 12 வயதுடைய மாணவன் தேர்வுக்கு பதிவு செய்திருந்தார்.
தேசிய பாடத்திட்ட இயக்குனர் (Dgesco) Caroline Pascal, 'இவை மிகவும் அபூர்வமான விடயஙகள். ஒவ்வொரு ஆண்டும் ஒரு மாணவன் மட்டுமே இந்த அளவுக்கு இளமையாக பங்கு பெறுகிறார்' எனத் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான தேர்வில், மொத்தம் 724,633 மாணவர்கள் பங்கேற்கின்றனர். அவர்களில் அதிக வயதானவராக 78 வயதுடையவர் ஒருவர் தோற்றுகிறார் (பொது மற்றும் தொழில்நுட்பப் பிரிவுகள்) எனவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1