அபாயா தடை - திருப்பி அனுப்பப்பட்ட மாணவர்கள்
5 புரட்டாசி 2023 செவ்வாய் 10:05 | பார்வைகள் : 8915
இஸ்லாமிய கலாச்சார உடையான அபாயா அணிய தடை விதிக்கப்பட்ட நிலையில், பாடசாலை மாணவர்கள் சிலர் நேற்று திங்கட்கிழமை பாடசாலையில் இருந்துதிருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
தேசிய கல்வி அமைச்சர் Gabriel Attal இதனை இன்று காலை அறிவித்தார். நேற்றுதிங்கட்கிழமை காலை ஆரம்பித்த புதிய கல்வி ஆண்டின் முதல் நாளின் போது பலநூறு இஸ்லாமிய மாணவிகள் அபாயா அணியாமல் வருகை தந்ததாகவும், அபாயாஅணிந்து 298 மாணவிகள் வருகை தந்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
67 மாணவிகள் தங்களது அபாயா ஆடையினை அகற்ற மறுத்துள்ளதாகவும், அவர்கள் வீடுகளுக்கு திரும்பியதாகவும் உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் அவர்கள் அடுத்த சில நாட்களில் பாடசாலைகளுக்குதிரும்பவேண்டிய கட்டாயம் உள்ளது. அவர்கள் என்ன முடிவு எடுக்கிறார்கள்என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.