லண்டனுக்கு மனைவியுடன் கிளம்பிய கோஹ்லி- 'கைது செய்யுங்கள்' என கொந்தளித்த ரசிகர்கள்

7 ஆனி 2025 சனி 07:24 | பார்வைகள் : 983
RCB வெற்றிக்கு பின்னர் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு பின்னர், கோஹ்லி தனது மனைவியுடன் லண்டனுக்கு புறப்பட்டது ரசிகர்களின் கோபத்தை தூண்டியது.
ஐபிஎல் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்ற பிறகு கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இதில் 11 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தேசிய அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக விராட் கோஹ்லி மற்றும் அனுஷ்கா ஷர்மா, "துரதிர்ஷ்டவசமான சம்பவங்களால் நாங்கள் மிகவும் வேதனையடைந்துள்ளோம்" என பதிவிட்டனர்.
ஆனால் அவர்கள் இருவரும் லண்டனுக்குப் புறப்பட்டது ரசிகர்கள், நெட்டிசன்கள் இடையே பெரும் சர்ச்சையானது.
ஒன்லைனில் பெரும் சீற்றத்தை இது தூண்டியதால், பலரும் "விராட் கோஹ்லியை கைது செய்யுங்கள்" என ஹேஷ்டேக் பதிவிட்டு ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1