கனடாவை அச்சுறுத்தும் ஈகோலை தொற்று... விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
5 புரட்டாசி 2023 செவ்வாய் 10:22 | பார்வைகள் : 6157
கனடாவில் சமீப காலமாக ஈகோலை தொற்று தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் ஈகோலை தொற்று தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கல்கரியின் ஐந்து சிறுவர் பராமரிப்பு நிலையங்களிலும் வேறும் ஐந்து இடங்களிலும் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த பக்றீரியா தொற்று பரவுகை காரணமாக குறித்த சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் மற்றும் பாடசாலைகளை மூடுமாறு சுகாதார தரப்பினர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வரையில் குறித்த இடங்கள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வுகூட பரிசோதனைகள் மூலம் 17 பேருக்கு இந்த நோய் தொற்று பரவியுள்ளமை உறுதியாகி உள்ளது.
12 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் ஈகோலை தொற்று காரணமாக சுமார் 50 சிறுவர்கள் வைத்தியசாலைக்கு சென்று பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மூடப்பட்ட பகுதிகளில் சிறுவர்கள் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தால் நோய் தொற்று குறித்து அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
தொற்றின் பிரதான நோய் அறிகுறியாக இரத்தப் போக்குடனான வயிற்றோட்டம் காணப்படுகின்றது.
நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை நாடுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.