Paristamil Navigation Paristamil advert login

வடதுருவ ஆக்கிரமிப்பு - கிரீன்லாந்து செல்கிறார் ஜனாதிபதி மக்ரோன்!!

வடதுருவ ஆக்கிரமிப்பு - கிரீன்லாந்து செல்கிறார் ஜனாதிபதி மக்ரோன்!!

7 ஆனி 2025 சனி 16:16 | பார்வைகள் : 3530


ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அரச பயணமாக கிரீன்லாந்து செல்ல உள்ளார்.

ஜூன் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இந்த பயணம் அமைய உள்ளதாக எலிசே மாளிகை குறிப்பிட்டுள்ளது. 'உறவினை வலுப்படுத்த இந்த பயணம் அவசியமாகிறது!' என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அங்கு வைத்து கிரீன்லாந்து பிரதமர்  Jens-Frederik Nielsen மற்றும் அங்கு வருகை தரும் டென்மார்க் பிரதமர் Mette Frederiksen இனையும் சந்திக்கிறார்.

இந்த சந்திப்பில் "வடக்கு அட்லாண்டிக் மற்றும் ஆர்க்டிக்கில் பாதுகாப்பு, அத்துடன் காலநிலை மாற்றம், ஆற்றல் மாற்றம் மற்றும் முக்கியமான கனிமங்களின் விநியோகத்தின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள்." கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்