Paristamil Navigation Paristamil advert login

பரிசில் ஓட்டப்போட்டி : சில வீதிகளில் வாகனங்களுக்கு தடை!!

பரிசில் ஓட்டப்போட்டி : சில வீதிகளில் வாகனங்களுக்கு தடை!!

7 ஆனி 2025 சனி 17:16 | பார்வைகள் : 702


நாளை ஜுன் 8, ஞாயிற்றுக்கிழமை பரிசில் ஓட்டப்போட்டி ஒன்று இடம்பெற உள்ளது. Adidas நிறுவனத்தின் ஏற்பாட்டில் 10 கி.மீ தூரம் ஓடக்கூடிய இந்த ஓட்டப்போட்டியை அடுத்து, பரிசில் சில வீதிக்கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Avenue Raymond Poincaré (Place Victor Hugo தொடக்கம் Rue de Longchamp வரை), 

Place Victor Hugo (Avenue Victor Hugo தொடக்கம் Avenue Raymond Poincaré வரை), 

Avenue Victor Hugo (Rue de la Pompe தொடக்கம் Place Victor Hugo வரை) 

Rue Mesnil வீதியின் ஒரு பகுதி

ஆகிய வீதிகளில் நாளை வீதி போக்குவரத்து தடைப்பட உள்ளன. இன்று நள்ளிரவு 12 மணியில் இருந்து நாளை பிற்பகல் 3 மணி வரை இந்த தடை இருக்கும் எனவும், சில வீதிகள் மாலை 6 மணி வரையும் மூடப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, 8 ஆம் மற்றும் 16 ஆம் வட்டாரங்களில் சில இடங்களில் வாகன தரிப்பிட அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வாகன சாரதிகள் அவதானத்துடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்