Paristamil Navigation Paristamil advert login

யூத விரோத தாக்குதல்கள் அதிகரிப்பு!!

யூத விரோத தாக்குதல்கள் அதிகரிப்பு!!

8 ஆனி 2025 ஞாயிறு 12:04 | பார்வைகள் : 5226


இவ்வருடத்தின் முதல் காலாண்டில் 436 யூத விரோத தாக்குதல்கள் பதிவாகியுள்ளன.

இந்த எண்ணிக்கை மிக மிக அதிகமாகும். 2023 ஆம் ஆண்டில் மொத்தமாக 1,670 யூத விரோத தாக்குதல்களும், 2024 ஆம் ஆண்டில் 1,570 தாக்குதல்களும் பதிவான நிலையில், இவ்வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் 436 தாக்குதல்கள் பதிவாகியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக ஒக்டோபர் 7 ஆம் திகதியின் பின்னர் இந்த தாக்குதல்கள் 280% சதவீதத்தால் அதிகரித்துள்ளன.

உடல் ரீதியான தாக்குதல்கள், பொது இடங்கள், யூத வழிபாட்டுத் தலங்கள், யூத குடும்பத்தினரின் வீடுகள், இணையத்தளம் போன்ற பல இடங்களில் இந்த தாக்குதல்கள் பதிவானதாகவும், இஸ்ரேல் பாலஸ்தீன தாக்குதல்கள் அதிகரித்துள்ளமையே இந்த தாக்குதல்களுக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்