போர்க்களத்திற்கு அருகே ட்ரோன் உற்பத்தி நிலையம் : Renaultஇன் புதிய முயற்சி!

8 ஆனி 2025 ஞாயிறு 14:48 | பார்வைகள் : 2083
பிரான்சின் மிகப்பெரிய கார் நிறுவமான Renault, உக்ரைனில் ட்ரோன்கள் தயாரிக்க தனது ஒத்துழைப்பை வழங்கவுள்ளது. இது பாதுகாப்புத் துறையில் சிறப்பு பெற்றுள்ள ஒரு பிரெஞ்சு நிறுவனத்துடன் சேர்ந்த கூட்டு முயற்சி ஆகும்.
உற்பத்தி நிலையங்கள் போர்க்களத்திற்கு அருகில் அமைக்கப்படும். இது ஐரோப்பாவின் இன்னொரு ஆயுதம் ஏந்தும் நடவடிக்கைகளுக்கான முக்கிய அடையாளமாகவும், உக்ரைனில் போர் துவங்கி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்ட புதிய திருப்பமாகவும் பார்க்கப்படுகிறது.
2025இல் உக்ரைனிய இராணுவம் நான்கு மில்லியன் ட்ரோன்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது, இதில் சில பிரஞ்சு இராணுவத்துக்கும் பயன்படும். பிரான்ஸ் இந்த துறையில் பின்னடைவை எதிர் கொண்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சர் Sébastien Lecornu, உக்ரைனியர்கள் ட்ரோன் வடிவமைப்பு மற்றும் அதன் செயல்திறனை உருவாக்குவதில் நம்மை விட சிறந்தவர்கள், எனவே பிரன்சுப் பணியாளர்கள் தேவைப்படவில்லை எனத் தோன்றுகிறது எனக் கூறியுள்ளார். Renault உலகம் முழுவதும் 1,20,000 பேருக்கு மேல் பணியமர்த்தி வருகிறது.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1