Paristamil Navigation Paristamil advert login

Clayes-sous-Bois : சிகரெட் விற்பனை நிலையத்தில் கொள்ளை

Clayes-sous-Bois : சிகரெட் விற்பனை நிலையத்தில் கொள்ளை

5 புரட்டாசி 2023 செவ்வாய் 14:56 | பார்வைகள் : 5585


Clayes-sous-Bois (Yvelines) நகரில் உள்ள சிகரெட் விற்பனை நிலையம் (Tabac) ஒன்றில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

rue Henri-Prou வீதியில் உள்ள குறித்த விற்பனை நிலையத்தில்  காலை 6.30 மணிஅளவில் நுழைந்த இரு கொள்ளையர்கள், அங்கிருந்த விற்பனை முகவரை மிரட்டிகடையைக் கொள்ளையிட்டுள்ளனர். €11,000 யூரோக்கள் பணத்தினையும், 20 சிகரெட் பெட்டிகளையும் கொள்ளையிட்டுக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். 

விற்பனை முகவர் தாக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்