முடிவுக்கு வந்தது தொழில்நுட்ப பிரச்னை: ஜூன் 10ல் இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா விண்வெளி பயணம்!

9 ஆனி 2025 திங்கள் 11:54 | பார்வைகள் : 1798
ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ் - 4 என்ற திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு, ஜூன் 10ம் தேதி இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா செல்கிறார்.
நாசா எனப்படும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் இணைந்து, 'ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ்- 4' என்ற திட்டத்தின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்ப உள்ளது.
கடந்த மே மாதம் 29ம் தேதி புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து, சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா செல்ல இருந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டது. இன்று (ஜூன் 8) மாலை 6:41 மணிக்கு விண்வெளி மையம் செல்வதாக இருந்தது. ஆனால் தொழில்நுட்ப பிரச்னையால் பயணம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் வரும் ஜூன் 10ம் தேதி, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு, இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா செல்கிறார். சுபான்ஷூ சுக்லா இந்திய விமானப்படையில் அனுபவம் வாய்ந்த விமானியாக இருந்தார். கடந்த 2 முறை தொழில்நுட்ப பிரச்னையால் பயணம் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. தற்போது அனைத்தும் முடிவுக்கு வந்தது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
''28 மணி நேர பயணத்திற்குப் பிறகு, 'ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ் - 4' என்ற திட்டத்தின் கீழ் ஜூன் 11ம் தேதி அன்று (இந்திய நேரப்படி இரவு 10 மணி) சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சுபான்ஷூ சுக்லா தலைமையிலான குழுவினர் சென்று அடைவார்கள்'' என அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (நாசா) தெரிவித்துள்ளது.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1