காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி.. குடும்ப வன்முறை!!

8 ஆனி 2025 ஞாயிறு 20:13 | பார்வைகள் : 5236
காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் 53 வயதுடைய ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
பா-து-கலே மாவட்டத்தின் Wingles நகரில் இச்சம்பவம் நேற்று ஜுன் 7, சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. இரவு 11 மணி அளவில் காவல்துறையினர் எச்சரிக்கப்பட்டு சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்டனர். நபர் ஒருவர் நீண்ட கத்தி ஒன்றை வைத்துக்கொண்டு குடும்பத்தினை அச்சுறுத்திக்கொண்டிருந்துள்ளார்.
அவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்த முற்பட்டனர். கத்தியை வீசிவிட்டு சரணடையும் படி அறிவுறுத்தப்பட்டார். ஆனால் குறித்த நபர் அதனை ஏற்க மறுத்துவிட்டு, காவல்துறையினரை தாக்க முற்பட்டுள்ளார்.
அதை அடுத்து, காவல்துறையினர் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார். குறித்த நபர் குடும்ப வன்முறை காரணமாக முன்னரே அறியப்பட்டவர் என தெரிவிக்கப்படுகிறது.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1