Paristamil Navigation Paristamil advert login

தேவாலயம் அருகே முதலாம் உலகப்போர்கால குண்டு! அதிர்ச்சியில் மக்கள்!

தேவாலயம் அருகே முதலாம் உலகப்போர்கால குண்டு! அதிர்ச்சியில் மக்கள்!

8 ஆனி 2025 ஞாயிறு 22:05 | பார்வைகள் : 1977


ஓய்ஸ் மாவட்டம் Guiscard பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு அருகில் முதலாம் உலகப்போர்க்கால குண்டு ஒன்று ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

காலை 11:30 மணியளவில் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து  அவர்கள் 100 மீட்டர் சுற்றளவில் பாதுகாப்பு வட்டத்தை அமைத்துள்ளனர். திருப்பலி முடிவில் மக்கள் அந்த பகுதியைத் தவிர்த்து செல்லவேண்டும் என அறிவிக்கப்பட்டது.

இந்த 114 மில்லிமீற்றர் குண்டை மாவட்ட அதிகாரத்தின் கீழ் பணியில் இருந்த குண்டு நிபுணர் பாதுகாப்பாக எடுத்துச் சென்றுள்ளார். இது யாரால் வைக்கப்பட்டது என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது. 

ஒருவர் தங்கள் வீட்டின் அடித்தளத்தில் அல்லது தோட்டத்தில் இருந்ததை இங்கு வைத்திருக்கலாம்," என காவல்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது. குண்டு மதியம் 1 மணியளவில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

காவல்துறை இதுபோன்ற ஒரு குண்டு தெருவில் வெளிப்படையாக வைக்கப்பட்டதை காண்பது இதுவே முதல் முறை என்றும், இது எப்படி வந்தது என்பதைப் பற்றிய விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்