மனைவியைத் தாக்க முயன்றவரைச் சுட்டு வீழ்த்திய காவற்துறையினர்!

8 ஆனி 2025 ஞாயிறு 23:48 | பார்வைகள் : 2432
Pas-de-Calais பிராந்தியத்தில், 2025 ஜூன் 7, சனிக்கிழமை மாலை, ஒரு ஐம்பதுகளுக்குள் உள்ள ஆணொருவரை காவற துறையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். இந்த நபர், 20-30 சென்டிமீட்டர் நீளமுள்ளஇறைச்சி குத்தும் கூரிய கம்பி போன்ற ஆயுதத்தால் (pic à viande) தன் மனைவியைக் கொல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் Wingles என்ற நகரத்தில், Lens நகருக்கு வடக்கே, நடைபெற்றது என டீéவாரநெ நகரத்தின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.
53 வயதான அந்த நபரின் மனைவியே, இரவு 11 மணியளவில் தனது உயிரிற்கு ஆபத்து என காவற்துறையினரை அழைத்துள்ளார். காவல்துறையினர் வந்தபோது, அவரை நிறுத்தும்படியும் ஆயுதத்தைக் கீழே போடும்படியும் ஆணையிட்டும், அதனைக் கேட்காமல் தொடர்ந்து ஆயுதத்துடள் முன்னேறி உள்ளார்.
Béthune சட்டமா அதிபர் Etienne Thieffry 'சம்பவ இடத்தின் சூழ்நிலை மற்றும் அவரின் செயற்பாடுகளைப் பார்த்து, காவற்துறையினர் துப்பாக்கியைப் பயன்படுத்த வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது. குறித்த நபர் மிகவும் ஆபத்தானவராக நடந்துகொண்டார், மேலும் அவருடைய மனைவியும் அருகிலேயே இருந்தார். அவரின் உயிர் ஆபத்தில் இருந்தது' எனத் தெ
ரிவித்துள்ளார்.
காவற்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் 53 வயதுடைய இந்த நபர் கொல்லப்பட்டுள்ளார். கிளர்ச்சி, வன்முறை, சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருத்தல் மற்றும் தொந்தரவு தொலைபேசி அழைப்புகள் போன்ற குற்றச்சாட்டுகளிற்காக இவர் ஏற்பனவே குற்றப் பதிவில் உள்ளவர் எனக் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். மனைவியால் முன்பு வழக்கு தொடுக்கப்பட்டதா என்ற விசாரணை நடைபெற்று கொண்டிருக்கிறது.
'சம்பவத்தை உறுதிப்படுத்தி, ஆரம்ப விசாரணைகளை மேற்கொள்ளும் நோக்கத்திலேயே துப்பாக்கிச் சூடு நடத்திய இரு காவற்துறையினரும் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றர்' என காவற்துறையினரின் தகவல் தெரிகிக்கின்றன.
ஏற்கனவே, இரண்டு காவற்துறையினரும் கொடுத்த விளக்கங்கள் மற்றும் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களை ஒன்றிணைத்துப் பார்க்கும்போது, அவர்கள் சட்டப்படி, தற்காத்துக்கொள்ளவும், மற்றவர்களை பாதுகாக்கவும் உரிய நடவடிக்கை எடுத்திருந்தது உறுதியாகின்றது என சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1