Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் முகக்கவசத்துக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்குமாறு கோரிக்கை!

இலங்கையில் முகக்கவசத்துக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்குமாறு கோரிக்கை!

9 ஆனி 2025 திங்கள் 13:41 | பார்வைகள் : 6073


அறுவை சிகிச்சைக்கான முகக்கவசங்கள் மற்றும் செனிடைசர்களுக்கு கட்டுப்பாட்டு விலையை விதிக்குமாறு தேசிய நுகர்வோர் முன்னணி (NCF) தலைவர் அசேல சம்பத், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியொன்றின்போதே அவர் இந்த கோரிகையை முன்வைத்துள்ளார்.

மேலும், அறுவை சிகிச்சை முகக்கவசங்களின் தற்போதைய விலை ரூ.50 ஆக உயர்ந்துள்ளதை சுட்டிக்காட்டி, அதை ரூ.10 ஆக குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பை உற்பத்தியாளர்கள் காரணம் என்று குறிப்பிட்டாலும், உடனடியாக தலையிடுவது அரசாங்கத்தின் பொறுப்பு என்று சம்பத் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்த அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலையை அரசாங்கம் குறைக்கவில்லை என்றால், மற்றொரு தொற்றுநோய் போன்ற பேரழிவு ஏற்படும் அபாயத்தில் பொதுமக்கள் அவற்றைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்" என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்