Paristamil Navigation Paristamil advert login

ஸ்ட்ரோபெரி முழுநிலவு பிரான்சில் எங்கே, எப்போது பார்வையிடலாம்?

ஸ்ட்ரோபெரி முழுநிலவு பிரான்சில் எங்கே, எப்போது பார்வையிடலாம்?

9 ஆனி 2025 திங்கள் 17:06 | பார்வைகள் : 4491


2025, ஜூன் 11ம் திகதி - பிரான்ஸ் உட்பட வடக்கு அரையகத்தில் (hémisphère nord) காண முடியும்.

இந்த ஸ்ட்ரோபெரி முழுநிலவு(FraiseLune) 2043 வரை மீண்டும் காண முடியாத அரிய நிகழ்வு என வானியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். இது வெயில்கால சூரிய நிழலுடன் (ஜூன் 21) நெருக்கமாக இருப்பதால், நிலா மிகவும் கீழாகத் தென்படும், மற்றும் செப்பு (cuivre) நிறத்தில் திகழும்.

பார்வைக்கு சிறந்த நேரம்:

காலை 9:44 (2006 க்குப் பிறகு இது தான் மிகக் கீழே தோன்றும் நிலா)
ஜூன் 10 இரவில், சிவப்பு நட்சத்திரமான யுவெயசèள, நிலாவுக்கு அருகில் தென்படும் பார்வைக்குச் சிறந்த அனுபவமாக இருக்கும்.

நகர ஒளியிலிருந்து விலகி பார்வையிடவும் – கிராமப்புறங்கள், மலைகள் போன்ற இடங்கள் சிறந்தவை.

ஏன் 'ஸ்ட்ரோபெரி நிலா' உன அமைக்கப்படுகின்றது.

இது நிலா சிவப்பாக மாறுவதால் அல்ல. ஜூனில் பழங்கள் (ஊதாப்பழங்கள், ஸ்ட்ரோபெரி) பழுக்கத் தொடங்கும் பருவத்தை அடிப்படையாகக் கொண்டு பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு 'சூடான நிலா', 'மலர்ந்த நிலா', 'ரோஜா நிலா' என்பனவும் பெயர்களாக உண்டு.

இது ஒருமுறைதான் வரும் அனுபவம்! தவற விடாதீர்கள்!

வர்த்தக‌ விளம்பரங்கள்