மக்ரோனின் தவறு - மரின் லூப்பனின் கொண்டாட்டம்!!

9 ஆனி 2025 திங்கள் 20:10 | பார்வைகள் : 6606
ஒரு வருடத்திற்கு முன், 2024 ஜூன் 9ஆம் தேதி, ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் தேசிய சட்டமன்றத்தை கலைத்தார். ஆனால் இது தேசியப் பேரணிக் கட்சியான RN (Rassemblement National), இது ஐரோப்பியத் தேர்தலில் பெற்ற மிகப்பெரிய வெற்றியின் நினைவாகும். இதை நினைவுகூர இன்று (ஜூன் 9) Loiret பகுதியில் ஒரு தேசியவாத வலதுசாரிக் கட்சிகளின் விழா நடைபெறுகிறது.

இந்த விழா மோர்மான்-சூர்-வெனிசொன் (Mormant-sur-Vernisson) என்ற சிறிய கிராமத்தில் நடைபெறுகிறது. RN கட்சியும் அதன் கூட்டாளிகளும் 'வெற்றிப் பண்டிகை' ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். கடந்த ஆண்டு ஜூனில், இங்கு 62 சதவீத மக்கள் RN பட்டியலுக்கு வாக்களித்தனர், மேலும் 90 சதவீதம் பேர் அதன் பாராளுமன்ற உறுப்பினரிற்காக வாக்களித்தனர்.
அந்தத் தேர்தலில் RN 31.37 சதவீத வாக்குகளுடன் முதல் இடத்தை பிடித்தது, ஜனாதிபதியின் பட்டியல் 14.6 சதவீதம் மட்டுமே பெற்றது. Patriots எனும் ஐரோப்பிய வலதுசாரிக் குழுவும் மூன்றாவது பெரிய சக்தியாக உயர்ந்தது.
பெரிய மக்கள் விழாவாக இந்த நிகழ்வில் இசை, உணவுக் கடைகள், மற்றும் அரசியல் பேச்சுகள் இடம்பெறுகின்றன. இதில் ஹங்கேரிய பிரதமர் விக்டர் ஓர்பன், இத்தாலிய துணைப் பிரதமர் மேட்டியோ சால்வினி மற்றும் பேட்ரியாட்ஸ் தலைவர் சாண்டியாகோ அபாஸ்கல் ஆகியோர் அடங்குவர்.
விழாவின் இறுதிப் பேச்சுகளை மாரின் லு பென் மற்றும் ஜோர்டன் பார்தெல்லா வழங்கி உள்ளார்கள். மரின்லு பென் தற்போது தகுதி நீக்கம் பெற்றிருப்பதால், பார்தெல்லா முன்னணியாக வந்துள்ள நிலையில், இருவரும் ஒருமித்து இருக்கின்றனர் என்பதை இந்த விழா உணர்த்துகின்றது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1