விசேட செய்தி : மேற்பார்வையாளருக்கு கத்திக்குத்து! - மாணவன் கைது!!

10 ஆனி 2025 செவ்வாய் 11:24 | பார்வைகள் : 2038
பாடசாலை வளாகம் ஒன்றில் வைத்து “மேற்பார்வையாளர்” ஒருவரை மாணவன் ஒருவன் கத்தியால் தாக்கியுள்ளான்.
ஆசிரியர் படுகாயமடைந்துள்ளார்.
இன்று ஜூன் 10, செவ்வாய்க்கிழமை காலை இச்சம்பவம் பிரான்சின் வடகிழக்கு மாவட்டமான Haute-Marne இல் உள்ள உயர்கல்வி பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது,.
ஜொந்தாமினர் அழைக்கப்பட்டு தாக்குதலாளி கைது செய்யப்பட்டுள்ளான்.
15 வயதுடைய அதே பாடசாலையைச் சேர்ந்த மாணவன் என ஜொந்தாமினர் தெரிவித்தனர்.
காயமடைந்த பெண் மேற்பார்வையாளர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்,
பாடசாலையில் உள்ள 324 மாணவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தாக்குதல் மேற்கொண்ட சிறுவனைக் கைது செய்யும் போது ஜொந்தாமினர் ஒருவர் காயமடைந்துள்ளதாக அறிய முடிகிறது.
தாக்குதலுக்கு இலக்கான மேற்பார்வையாளர் 31 வயதுடையவர் எனவும், “அவசர நிலையில்” உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் என அறிய முடிகிறது.
மேலதிக விபரங்கள் விரைவில் வெளியாகும். பரிஸ் தமிழ் இணையத்தோடு இணைந்திருங்கள்!!
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1