Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்க நூலகத்தில் தீ விபத்து - தீயை அணைக்க போராடும் வீரர்கள்

அமெரிக்க நூலகத்தில் தீ விபத்து - தீயை அணைக்க போராடும் வீரர்கள்

10 ஆனி 2025 செவ்வாய் 15:40 | பார்வைகள் : 2259


அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்திலுள்ள பொது நூலத்தின் வாகன நிறுத்தத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழந்துள்ள நிலையில், நூலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் வெடிக்கும் சத்தம் கேட்டதாக அப்பகுதியிலுள்ள மக்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், அந்த நூலகத்தில் பரவியுள்ள தீயை அணைக்க சுமார் 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

இருப்பினும், இந்தச் சம்பவத்துக்கான காரணம் குறித்து எந்தவொரு செய்தியும் வெளியிடப்படவில்லை.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்