இலங்கையில் பொலிஸாரை தாக்கிய ஐவருக்கு நேர்ந்த கதி

10 ஆனி 2025 செவ்வாய் 14:02 | பார்வைகள் : 3636
பேருவளை - மீன்பிடி துறைமுகப் பகுதியில் பொலிஸ் அதிகாரிகளை தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இன்று மாலை களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர்கள் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், களுத்துறை நீதவான் நீதிமன்றத்தின் மேலதிக நீதவான், 5 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
நேற்று இரவு, பேருவளை மீன்பிடி துறைமுகத்துக்கு அருகில், பொலிஸாருக்கும் பௌத்தக் கொடிகளை ஏற்றி வைத்திருந்த ஒரு குழுவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதன்போது ஏற்பட்ட உரையாடல் தீவிரமடைந்ததை அடுத்து, அந்தக் குழு பொலிஸாரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
பின்னர், சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
குழுவொன்று லொறியில் ஏறி பௌத்த கொடிகளை ஏற்றியவாறு இருந்தபோது, பொலிஸார் வீதியை மறைக்க வேண்டாம் என அவர்களுக்கு அறிவுறுத்திய பின்னர் இந்தச் சம்பவம் ஏற்பட்டது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1