ரஜினிகாந்தை சந்தித்த வனிதா விஜயகுமார்.. இதுதான் காரணமா?
10 ஆனி 2025 செவ்வாய் 17:20 | பார்வைகள் : 3363
நடிகை வனிதா விஜயகுமார் முக்கிய வேடத்தில் நடித்து இயக்கியுள்ள 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' என்ற திரைப்படத்தை அவரது மகள் ஜோதிகா தயாரித்துள்ள நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் தேதியை ரஜினிகாந்தை வைத்து அவர் வெளியிட்டுள்ளார்.
வனிதா விஜயகுமார் எழுதி இயக்கிய 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி உள்ளது. வனிதா விஜயகுமார், ராபர்ட், ஸ்ரீமன், ஷகிலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார் சீனிவாசன், செஃப் தாமு உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கும் இந்த படம் ஜூலை 4ஆம் தேதி வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
வனிதா மற்றும் ஜோதிகா ஆகிய இருவரும் சூப்பர் ஸ்டார் ரஜினியை நேரில் சந்தித்த நிலையில், ரஜினிகாந்த் இந்த படத்தின் ரிலீஸ் செய்தியை வெளியிட்டுள்ளார். மேலும், ரஜினியுடன் படக்குழுவினர் வாழ்த்து பெற்ற புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

























Bons Plans
Annuaire
Scan