Paristamil Navigation Paristamil advert login

ஒஸ்ரியா : பாடசாலையில் துப்பாக்கிச்சூடு! பிரெஞ்சு மாணவனும் பலி!!

ஒஸ்ரியா : பாடசாலையில் துப்பாக்கிச்சூடு!  பிரெஞ்சு மாணவனும் பலி!!

10 ஆனி 2025 செவ்வாய் 20:52 | பார்வைகள் : 1933


ஒஸ்ரியாவில் இன்று காலை பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் ஒரு பிரெஞ்சு மாணவனும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 

ஒஸ்ரியாவின் Graz நகரில் உள்ள உயர்கல்வி பாடசாலையில் இனு காலை 21 வயதுடைய மாணவன் ஒருவர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு மேற்கொண்டிருந்தான். இதில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். பின்னர் ஆயுத்தாரி பாடசாலையில் குளியலறைக்குச் சென்று தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டான்.

 

இச்சம்பவம் ஐரோப்பா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கொல்லப்பட்டவர்களில் 17 வயதுடைய பிரெஞ்சுச் மாணவனும் உள்ளதாக சற்று முன்னர் செய்திகள் வெளியாகியுள்ளன.

வர்த்தக‌ விளம்பரங்கள்