Paristamil Navigation Paristamil advert login

இணைய வழியிலும் சிறுவர்களுக்கு கத்தி விற்பனை இல்லை! - ஜனாதிபதி மக்ரோன்!

இணைய வழியிலும் சிறுவர்களுக்கு கத்தி விற்பனை இல்லை! - ஜனாதிபதி மக்ரோன்!

11 ஆனி 2025 புதன் 05:50 | பார்வைகள் : 2059


15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கத்தி விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்படுவதாக பிரதமர் பிரான்சுவா பெய்ரூ அறிவித்திருந்தார். இந்நிலையில், நேற்று ஜனாதிபதி மக்ரோன் தெரிவிக்கையில், ‘இணையத்தளங்கள் ஊடாகவும் விற்பனைக்கு தடை விதிக்கப்படுகிறது’ என தெரிவித்தார்.

"நாங்கள் காத்திருக்க முடியாது." "பதினைந்து வயது சிறுவன் இனி இணையத்தில் கத்தியை வாங்க முடியாது." என அவர் தெரிவித்தார். நேற்று ஜூன் 10, செவ்வாய்க்கிழமை France 2 தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதன் போதே இதனைத் தெரிவித்தார்.

பாடசாலை மேற்பார்வையாளர் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து உடனடியாக நடைமுறைக்கு வரும் விதமாக இந்த அறிவித்தலை ஜனாதிபதி வெளியிட்டார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்