'பிரான்சின் வல்லமையை பறைசாற்றும் அணிவகுப்பு!'

11 ஆனி 2025 புதன் 07:00 | பார்வைகள் : 2082
ஜூலை 14, தேசிய நாளில் இராணுவ அணிவகுப்பு மிக எழுச்சியாக இடம்பெற உள்ளது. பிரான்சின் வல்லமையை பறைசாற்றும் விதத்தில் இவ்வருட அணிவகுப்புகள் இடம்பெற உள்ளன.
குறிப்பாக யுக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு பெருமெடுப்பில் இடம்பெற்று வருவதால், ஐரோப்பிய எல்லைகளை பாதுகாக்க பிரான்ஸ் தயாராக இருப்பதைக் காட்டுவதற்காக இந்த தேசிய நாள் அணிவகுப்பை பயன்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அணிவகுப்பில் முதன்முறையாக 7,000 பேர் கலந்துகொள்ள உள்ளன. இதற்கு முன்பாக 5,500 பேர் கலந்துகொண்டதே பெரும் எண்ணிக்கையாக இருந்தது.
63 போர் விமானங்கள், 33 உலங்குவானூர்திகள், 155 கவச வாகனங்கள், 200 குதிரைகள் என பெரும் எடுப்பில் இம்முறை சோம்ப்ஸ்-எலிசே களைக்கட்ட உள்ளது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1