அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஊரடங்கு உத்தரவு

11 ஆனி 2025 புதன் 08:44 | பார்வைகள் : 1981
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அமெரிக்க அரசுக்கு எதிராக கடந்த சில நாட்களாக போராட்டம் நடந்து வரும் நிலையில், இந்தப் போராட்டம் தற்போது வன்முறையாக மாறி உள்ளது.
இதனை பயன்படுத்தி ஆப்பிள் ஸ்டோரை போராட்டக்காரர்கள் என்ற பெயரில் மர்ம நபர்கள் சூறையாடியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு உத்தரவு லொஸ் ஏஞ்சல்ஸ் நகர மையத்தின் ஒரு சிறிய பகுதியான 1 சதுர மைல் பரப்பளவில் பொருந்தும் என்றும், உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி முதல் புதன்கிழமை காலை 6 மணி வரை அமலில் இருக்கும் எனவும் லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரேன் பாஸ் அறிவித்துள்ளார்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025