Paristamil Navigation Paristamil advert login

நடைப்பயிற்சி பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்..!

நடைப்பயிற்சி பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்..!

8 ஆவணி 2023 செவ்வாய் 14:01 | பார்வைகள் : 9072


 நடைப்பயிற்சி என்பது உடல் நலனுக்கு நல்லது என்றாலும் அந்த நடை பயிற்சியை முறைப்படி செய்ய வேண்டும் என்பதுதான்  பலரது கருத்தாக உள்ளது.

 பொதுவாக நடைப்பயிற்சி என்பது ஒரே வேகத்தில் நடப்பதை விட கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை மாற்றுவது நல்லது என்று கூறப்படுகிறது. நிதானமாக நடப்பதை விட வேகமாக நடந்தால் அதிக கலோரிகள் எரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அதேபோல் சமதளத்தில் நடப்பதை விட சற்று உயரமான பகுதியை நோக்கி நடப்பது கூடுதல் கலோரிகளை எரிக்கும் என்றும் கூறப்படுகிறது. மலை பாங்கான பகுதிகளில்  நடைப்பயிற்சி செய்தால் மிகவும் நல்லது 
 
 நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்வது நல்லது தான் என்றாலும் அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப நேரத்தை குறித்துக் கொள்ள வேண்டும். அதேபோல் ஒரே நேரத்தில் தினமும் உடற்பயிற்சி செய்யாமல் மூன்று அல்லது நான்கு நேரம் சிறிது சிறிதாக பிரித்து நடைபெற்று செய்து கொள்ளலாம். 
 
தினமும் பத்தாயிரம் அடிகள் நடப்பது என்பது  உடல் எடை இழப்பதற்கு உதவிகரமாக இருக்கும்.  நடைப்பயிற்சியை சாதாரணமாக உடற்பயிற்சியாக கருதாமல் சின்சியராக செய்ய வேண்டும் என்பதும் நடையின் வேகத்தை அதிகரிக்கலாம் ஆனால் அதே நேரத்தில் ஓடக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்