Paristamil Navigation Paristamil advert login

தோனியை பிக்பாக்கெட் திருடன் உடன் ஒப்பிட்டு பேசிய ரவி சாஸ்திரி

தோனியை பிக்பாக்கெட் திருடன் உடன் ஒப்பிட்டு பேசிய ரவி சாஸ்திரி

11 ஆனி 2025 புதன் 13:15 | பார்வைகள் : 1659


ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் நிகழ்வில், ரவி சாஸ்திரி தோனியை பிக்பாக்கெட் திருடன் உடன் ஒப்பிட்டு பேசியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவராக இருந்த மகேந்திர சிங் தோனி, இந்திய அணிக்காக 3 ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார்.

கிரிக்கெட் வரலாற்றில் மூன்று ஐசிசி வெள்ளை பந்து (White Ball) கோப்பைகளையும் வென்ற ஒரே அணித்தலைவர் தோனி மட்டுமே.

தோனியின் கிரிக்கெட் வாழ்வை கௌரவிக்கும் வகையில், அவரின் பெயர், உயரிய ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம்(ICC Hall of Fame) பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட்டிற்கு சிறந்த முறையில் பங்களிப்பு அளித்த கிரிக்கெட் ஜாம்பவான்களின் சாதனைகளை போற்றும் வகையில் 'ஹால் ஆஃப் ஃபேம்' அங்கீகாரத்தை ஐசிசி வழங்கி வருகிறது.

2009 ஆம் ஆண்டு முதல், இந்தப் பட்டியலில் இதுவரை 122 கிரிக்கெட் வீரர்கள், வீராங்கனைகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. இதில், தோனி 11வது இந்தியர் ஆவார்.

இந்த ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் நிகழ்வில் பேசிய ரவிசாஸ்திரி, "தோனிக்கு ஒரு பிக்பாக்கெட் திருடனை விட வேகமான கைகள் உள்ளன. அந்த அளவுக்கு வேகமாக தோனியின் கைகள் ஸ்டம்பிங் செய்கின்றன.

இந்தியாவில், அதிக கூட்டம் வரும் அகமதாபாத் போன்ற பெரிய மைதானங்களுக்கு சென்றால், எம்.எஸ். தோனி போன்றவர்கள் உங்கள் பின்னால் இருப்பதை விரும்ப மாட்டீர்கள். நீங்கள் பின்னால் பார்த்து கொண்டே இருப்பீர்கள். இல்லையென்றால் உங்கள் பணப்பை காணாமல் போகிவிடும்.

தோனி, ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தாலும், சதம் அடித்தாலும், கோப்பை வென்றாலும் ஒரே மாதிரியாக தான் இருப்பார். அவரிடம் எந்த மாற்றத்தையும் காண முடியாது" என கூறினார்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்