பாதாம் சாப்பிடுவதால் பெண்களுக்கு ஏற்படும் நன்மைகள்..!
30 ஆடி 2023 ஞாயிறு 09:14 | பார்வைகள் : 5021
பெண்கள் தங்களது உடல் ஆரோக்கியத்துககு அவசியமான ஊட்டச்சத்துக்களை பெறுவதற்கு பாதாமை தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி இங்கே பார்க்கலாம்.
பாதாமை ஊறவைத்து அதன் மேல் தோலை நீக்கிய பின்பு சாப்பிடுவதே சிறந்தது. ஒரு கைப்பிடி அளவு பாதாமை முதல் நாள் இரவு ஊறவைத்து அடுத்தநாள் காலையில் எழுந்தவுடன் காலை உணவுக்கு முன்பாக சாப்பிடலாம். இவ்வாறு தினமும் சாப்பிட்டு வந்தால் புரதச்சத்து நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்சிடென்டுகள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் பெறலாம்.
தொடர்ந்து பாதாமை சாப்பிட்டு வருவதன் மூலம் சுவாசக்கோளாறு இதய நோய், நீரிழிவு நோய், சரும பிரச்சனை, முடி உதிர்வு, ரத்த சோகை போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம்.
தினமும் 6-7 ஊறவைத்த பாதாம் பருப்பகளை சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம். உடல் எடையை குறைப்பதற்கு முயற்சிப்பவர்கள். தினமும் 5 பாதாம் பருப்புகளை சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் கலந்துள்ள கெட்ட கொழுப்பு கரையும். ஊறவைத்த பாதாமில் உள்ள சத்துக்கள் ரத்தத்தில் ஆல்ஃபா டேகோபெராலை அதிகரித்து ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகின்றன.
ரத்தத்தில் வெள்ளை மற்றும் சிகப்பு அணுக்களை பெருக்கும் சக்தி கொண்டது பாதாம் இதில் எலும்பு வளர்ச்சிக்கு தேவையான கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளது. ரிபோஃபிளேவின் எல் கார்னிடைன் போன்றவை மூளையின் செயல்திறனை மேம்படுத்தி புத்தி கூர்மையை அதிகரிப்பதற்கு உதவுகின்றன.
நரம்பு மண்டலத்தின் சீரான இயக்கத்துக்கு பாதாம் பெரிதும் உதவுகிறது. வயது முதிர்ச்சியால் வரக்கூடிய ஞாபக மறதி நோயை தடுக்கம் ஆற்றல் பாதாமில் உள்ளது. பாதாம் எண்ணெய் கொண்டு சருமத்தை மசாஜ் செய்து வந்தால் உடலில் ரத்த ஓட்டத்தின் அளவு அதிகரித்து சருமம ஆரோக்கியமாகவும், பொலிவுடனும் இருக்கும்.
தினமும் இரவில் தூங்கச்செல்வதற்கு முன்பு முகத்தில் பாதாம் எண்ணெய் தடவி மென்மையாக மசாஜ் செய்து வந்தால் பொலிவு அதிகரிக்கும்.