மருத்துவ பலன்களை வாரி வழங்கும் வாழைக்காய்..!
27 ஆடி 2023 வியாழன் 13:32 | பார்வைகள் : 4538
வாழைப்பழம் சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும் என்பது பலருக்கும் தெரியும். அதே போல வாழைக்காயையும் மலம் கழிக்க சிரமப்படுபவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது சிறந்த பலன் தருகிறது. வாழைக்காயில் செரிமானத்தை ஊக்குவிக்க கூடிய பொருட்கள் காணப்படுகிறது. அது மட்டும் அல்லாமல் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள், வீக்க எதிர்ப்பு பண்புகள் மற்றும் இதய நோய்க்கு எதிராக செயல்படும் பண்புகளும் இருக்கிறது. வாழைக்காயில் காணப்படும் பிரீ பையாடிக் விளைவு குடலில் இருக்கக்கூடிய நல்ல பாக்டீரியா வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது : இதயத்திற்கு நன்மை பயக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் பல வாழைக்காயில் காணப்படுகிறது. வாழைப்பழம் மற்றும் உருளைக்கிழங்குகளை போல வாழைக்காயிலும் ஏராளமான பொட்டாசியம் சத்து உள்ளது. இந்த பொட்டாசியம் சத்தானது இயற்கை வாசோடைலேட்டராக செயல்பட்டு தசைகளின் சுருக்கத்திற்கும், இரத்த அழுத்தத்தை சீராக பராமரிப்பதற்கும் உதவி புரிகிறது. வாழைக்காயில் பொதிந்துள்ள மாவுச்சத்து ஆரோக்கியமான சர்க்கரை அளவுகளை பராமரிக்க உதவுகிறது.
வாழைக்காய் பொதுவாக அதிக இனிப்பு சுவையை கொண்டிருக்காது. வாழைப்பழங்களை காட்டிலும் இதில் குறைந்த அளவு சர்க்கரை உள்ளது. வாழைக்காயில் காணப்படும் பெக்டின் மற்றும் மாவுச்சத்து உணவுக்கு பிறகு ரத்த சர்க்கரை அளவுகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை சீராக்குகிறது. அதோடு வாழைக்காய் குறைந்த கிளைசீமிக் அளவையும் கொண்டுள்ளது.
ஃப்ரீ ரேடிக்கல்ஸ் மற்றும் ஆக்ஸிடேடிவ் சேதத்திற்கு எதிராக செயல்பட நமது உடலுக்கு ஆன்டி-ஆக்சைடுகள் அவசியம் உடலில் இருக்கக்கூடிய செல்களின் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்கிறது. வாழைக்காய் முழுக்க முழுக்க இது போன்ற ஆண்டி ஆக்சிடென்ட்களை கொண்டுள்ளது அது மட்டுமல்லாமல் வாழைக்காயில் வைட்டமின் சி பீட்டா கரோட்டின் மற்றும் பிற சைடு நியூட்ரியன்ட்களும் காணப்படுகின்றன.
வாழைக்காயில் காணப்படும் அதிக அளவு மாவுச்சத்து மற்றும் பெக்டின் பசியை கட்டுப்படுத்துகிறது. இதில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால் வாழைக்காய் சாப்பிட்டவுடன் வயிறு நிறைந்த உணர்வு ஏற்படுகிறது. இதனால் அதிகப்படியான கலோரிகள் சாப்பிடுவதை தவிர்க்கிறோம். உடல் எடை குறைக்க விரும்புபவர்களுக்கு வாழைக்காய் சிறந்த உணவு./