உடல் எடை குறைப்பதற்கு உதவும் பாரம்பரிய முறைபற்றி தெரியுமா?
17 ஆடி 2023 திங்கள் 07:05 | பார்வைகள் : 4291
உடல் பருமன் காரணமாக நீங்கள் அவதிப்பட்டு வருகிறார்கள் என்றால் ஆயுர்வேத முறையில் உடல் எடையை குறைக்க முயற்சிப்பது பயனுள்ளதாக இருக்கும்.உங்களுக்கான சில பயனுள்ள ஆயுர்வேத டிப்ஸ்கள் இங்கே:
லெமன் வாட்டர்: எலுமிச்சை நீர் எனப்படும் லெமன் வாட்டர் ஒரு இயற்கையான டீடாக்ஸிஃபையிங் ட்ரிங்க்காக இருக்கிறது. குறிப்பாக எடையை இழக்க முயற்சிப்போருக்கு இது ஒரு ஆரோக்கிய பானமாக இருக்கும். லெமன் வாட்டர் பற்றி கூறி இருக்கும் Healthline, இந்த ஆரோக்கிய பானம் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதோடு உடலை ஹைட்ரேஷனாக வைத்திருக்க உதவுகிறது. தவிர திருப்தி உணர்வை ஊக்குவித்து பசியை கட்டுப்படுத்துவதோடு எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது.
தினசரி தவறாமல் உடற்பயிற்சி: ஆரோக்கியமான எடையை பராமரிக்க அல்லது அடைய வழக்கமான அடிப்படையில் தினசரி உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது அவசியம். தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது என்பது உடலில் இருந்து அதிக அளவில் வியர்வை வெளியேற உதவுவதாக ஆயுர்வேதம் சொல்கிறது. ஆயுர்வேத நிபுணர்களின் கூற்றுப்படி, ஒருவர் தினசரி 45-60 நிமிடங்கள் உடற்பயிற்சி அல்லது யோகா உள்ளிட்ட உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது உடலில் வளர்சிதை மாற்ற செயல்பாட்டை (metabolic activity) அதிகரிக்கிறது.
தியானம்: உடல் எடையை குறைக்க ஏற்ற மற்றும் பயனுள்ள வழிகளில் ஒன்றாக தியானம் இருக்கிறது. Healthline-ன் கூற்றுப்படி வழக்கமான அடிப்படையில் தினசரி சிறிது நேரம் தியானத்தில் ஈடுபடுவது மனதையும் உடலையும் இணைக்க உதவும் ஒரு பயிற்சியாக இருக்கிறது. மேலும் உடல் அமைதி உணர்வை அடையவும் தியானம் உதவுகிறது.
உணவுகளில் கவனம்: பொதுவாக ஆயுர்வேத மருத்துவ முறையானது ஊட்டச்சத்து மிக்க மற்றும் ஆரோக்கிய உணவுகளை டயட்டில் சேர்ப்பதை உள்ளடக்கியது. இந்த முறைப்படி ஆரோக்கியமாக சாப்பிடுவது என்பது பழங்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய உணவுகளை சாப்பிடுவது மட்டுமல்ல, நாளொன்றுக்கு 3 வேளை சாப்பிடுவதும் இதில் அடங்கும். காலை உணவை 8 - 9.30-க்குள் முடித்துவிட வேண்டும். மதிய உணவில் காய்கறிகள், தானியங்கள் மற்றும் இறைச்சி உள்ளிட்டவற்றை சேர்க்கலாம். இரவு லேசான உணவுகளை சாப்பிட வேண்டும் அதுவும் 7.30-க்கு முன் சாப்பிட வேண்டும். லைட்டான டின்னரில் சூப்கள் மற்றும் சாலட்கள் சேர்ப்பது சிறந்த செரிமானத்திற்கு உதவும். இரவு நேரத்தில் செரிமான சக்தி குறைவாக இருக்கும் என்பதால் டின்னர் ஹெவியாக இருக்க கூடாது.
சாப்பிட்ட பிறகு வாக்கிங்: சாப்பிட்டு முடித்து 1 மணி நேரம் காத்திருந்து பின் வாக்கிங் செல்வதை விட சாப்பிட்டு முடித்த சில நிமிடங்களுக்கு பிறகு வாக்கிங் போவது உடல் எடையை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இரவு சாப்பிட்டு முடித்த பிறகு செல்லும் 10 நிமிட வாக்கிங்கானது, பகல் நேரங்களை விட ரத்த குளுக்கோஸ் அளவை மேம்படுத்துவதாக அமெரிக்க நீரிழிவு சங்கம் கூறியுள்ளது. எனவே தினமும் சாப்பிட்ட பிறகு நடைபயிற்சி செய்வது insulin insensitivity ஆபத்தை குறைக்கும்.