ஏர் இந்தியா விமான விபத்து; பிரட்டன் பிரதமர் கவலை

12 ஆனி 2025 வியாழன் 18:10 | பார்வைகள் : 1058
இந்தியா ஆமதாபாத்த்தில் ஏர் இந்தியா விமான விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக பிரட்டன் பிரதமர் கியெர் ஸ்டார்மர் பதிவிட்டுள்ளார்.
குஜராத் மாநிலம் ஆமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு இன்று பிற்பகல் 1.30 மணிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சிறிது நேரத்தில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விமானத்தில் பயணித்த 53 பிரிட்டன் நாட்டினர் உள்பட 242 பயணிகள் பயணம் செய்ததை ஏர் இந்தியா உறுதி செய்துள்ளது.
இந்த நிலையில், விபத்து குறித்து பதிவிட்டுள்ள பிரிட்டன் பிரதமர், பிரிட்டனைச் சேர்ந்த பலருடன் இந்தியாவின் ஆமதாபாத்தில் இருந்து லண்டனை நோக்கிப் புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளான காட்சிகள் அதிர்ச்சியும் வேதனையும் ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய நிலை குறித்து எனக்கு தொடர்ந்து தகவல்கள் அளித்து வருகின்றனர். இந்த துயரமான நேரத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளன என கூறியுள்ளார்.