சீனாவில் ஏஐ செயலிகளுக்கு தடை
 
                    12 ஆனி 2025 வியாழன் 18:10 | பார்வைகள் : 3648
சமீபமாக உலகம் முழுவதும் ஏஐ தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. சீனாவில் இந்த ஏஐ மற்றும் அதுசார்ந்த டெவலப்பர் செயலிகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஓபன் ஏஐ நிறுவனத்தின் Chat GPT வருகைக்கு பிறகு Gemini AI, Meta AI, Bard என ஏகப்பட்ட ஏஐ தளங்களும், அது சார்ந்த ஏஐ கருவிகளும் அறிமுகமாகி வருகின்றன.
இந்த ஏஐ தொழில்நுட்ப போட்டியில் களமிறங்கிய சீனாவும் Deepseek AI, Qwen AI என பல ஏஐகளை அறிமுகப்படுத்தி சீனா முழுக்க பயன்பாட்டில் வைத்துள்ளது.
இந்நிலையில்தான் சீனாவில் பள்ளி மாணவர்களுக்கான தெசிய பொதுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில் 1.30 கோடி மாணவர்கள் இந்த தேர்வுகளை எழுத உள்ளனர். தற்போது ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தேர்வுகளில் முறைகேடு செய்வது அதிகரித்துள்ளது.
அதை தவிர்ப்பதற்காகவும், மாணவர்கள் நேர்மையான முறையில் தேர்வு எழுதுவதற்காகவும் தற்காலிகமாக இந்த ஏஐ வசதிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் முடிந்த பிறகு சீனாவில் மீண்டும் அவை செயல்பாட்டுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.
அதேவேளை எதிர்காலத்தில் மாணவர்கள் ஏஐ தொழில்நுட்பத்தை தேர்வில் பயன்படுத்தும் வாய்ப்புகள் உள்ளதால், சீனாவை முன்னுதாரணமாக கொண்டு தேர்வு சமயங்களில் ஏஐ பயன்பாட்டிற்கு தற்காலிக தடை விதிக்க வேண்டிய சூழல் மற்ற நாடுகளுக்கும் வரலாம் என்று கூறுகின்றனர் தொழில்நுட்ப நிபுணர்கள்.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 KBis தேவைகளை குறைந்த கட்டணத்தில் பெற்றுக்கொள்ள.
        KBis தேவைகளை குறைந்த கட்டணத்தில் பெற்றுக்கொள்ள.         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan