Paristamil Navigation Paristamil advert login

அகதிகள் வருகையை எதிர்க்கும் பிரெஞ்சு மக்கள்!

அகதிகள் வருகையை எதிர்க்கும் பிரெஞ்சு மக்கள்!

13 ஆனி 2025 வெள்ளி 07:00 | பார்வைகள் : 1266


 

பிரான்சுக்கு வருகை தரும் அகதிகள் தொடர்பில் பொதுமக்களின் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் கருத்துக்கணிப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதில் பெருமளவான மக்கள் “அகதிகள் வருகையை விரும்பவில்லை” என தெரிவித்துள்ளனர்.

”புதிய அகதிகள் பிரான்சுக்குள் வருவது தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன?” என கருத்துக்கணிப்பில் கேள்வி எழுப்பட்டது. அதற்கு 64% சதவீதமான மக்கள் “எதிர்ப்பதாக” (oppose) தெரிவித்துள்ளனர். ஏனைய 36% சதவீதமானவர்கள் ஆதரிப்பதாக (favorable) தெரிவித்துள்ளனர்.

2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் மட்டும் 13,065 புகலிட கோரிக்கை மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கருத்துக்கணிப்பை CSA  நிறுவனம் CNEWS, Europe 1 மற்றும்  Journal du Dimanche ஆகிய ஊடகங்களுக்காக மேற்கொண்டிருந்தன. இதில் 18 வயது நிரம்பிய 1,010 பேர் பங்கேற்றிருந்தனர். இதன் முடிவுகள் நேற்று வியாழக்கிழமை வெளியாகியிருந்தது.

வர்த்தக‌ விளம்பரங்கள்