Paristamil Navigation Paristamil advert login

பாரிஸ் - லண்டன் பயணங்கள் தொடர்பில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வெளியிட்ட அறிவிப்பு

பாரிஸ் - லண்டன் பயணங்கள் தொடர்பில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வெளியிட்ட அறிவிப்பு

13 ஆனி 2025 வெள்ளி 13:49 | பார்வைகள் : 1222


மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை காரணமாக சில வான்வழிகள் மூடப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை தெரிவித்துள்ளது.

இதனால் லண்டன் உட்பட  ஐரோப்பிய நாடுகளின் வான் வழித்தடங்களில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக,  ஐரோப்பிய நாடுகளுக்கான விமான சேவைகளின் போது விமான பயணத்துக்கான நேரம் அதிகரிக்க கூடும்.

லண்டனில் இருந்து கொழும்பை வந்தடைந்த UL - 504 விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக மாற்றுப்பாதையில் தோஹாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டது.

இதேவேளை, கொழும்பிலிருந்து பாரிஸ் நோக்கி புறப்பட்ட UL - 501 விமானம் மாற்றுப்பாதையில் பயணிக்கின்றது.

மேலதிக தகவல்களுக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையின் 1979 , 94 11 777 1979 அல்லது 94 74 444 1979 என்ற தொலைப்பேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளவும். 

வர்த்தக‌ விளம்பரங்கள்