விக்ரமின் 63வது படம் கைவிடப்பட்டதா?
 
                    13 ஆனி 2025 வெள்ளி 16:24 | பார்வைகள் : 1169
நடிகர் விக்ரம் நடித்து கடைசியாக வெளியான 'வீர தீர சூரன் 2' படத்திற்கு பிறகு 'மண்டேலா, மாவீரன்' ஆகிய படங்களை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கும் புதிய படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கின்றார். இது விக்ரமின் 63வது படமாக உருவாகிறது. சாந்தி டாக்கீஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றனர் என ஏற்கனவே அறிவிப்புகள் வெளியானது.
கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் திரைக்கதை பணியை மேற்கொண்டு வந்தார் மடோன் அஸ்வின். ஆனால், இந்த படத்தின் திரைக்கதையில் விக்ரம், மடோன் அஸ்வின் இருவரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இப்படம் கைவிடப்பட்டது என்கிற தகவல்கள் பரவி வருகிறது .ஆனால், இது குறித்து எந்தவொரு மறுப்பும் படக்குழு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று






 ALARME 24 மணி நேர பாதுகாப்பு
        ALARME 24 மணி நேர பாதுகாப்பு         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan