Paristamil Navigation Paristamil advert login

பேருந்து விபத்து! - நால்வர் பலி.. 27 பேர் காயம்!!

பேருந்து விபத்து! - நால்வர் பலி.. 27 பேர் காயம்!!

13 ஆனி 2025 வெள்ளி 20:00 | பார்வைகள் : 3548


 

இன்று ஜூன் 13, வெள்ளிக்கிழமை நண்பகல் இடம்பெற்ற பேருந்து விபத்தொன்றில் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். 9 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 18 பேர் சிறிய காயங்களுக்கு உள்ளாகினர்.

Sarthe மாவட்டத்தின் Degré எனும் சிறு நகரை ஊடறுக்கும் A81 நெடுஞ்சாலையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. 60 பேரை ஏற்றிக்கொண்டு பயணித்த பேருந்து, திடீரென கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, விபத்துக்குள்ளானது. அவர்களில் பெரும்பாலானோர் யுக்ரேனியர்கள் எனவும், அவர்களில் பலர் 15 தொடக்கம் 18 வயதுவரையுள்ளவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அவரள் மேற்கு யுக்ரேனில் உள்ள Kitsman நகரில் இருந்து பிரான்சுக்கு சுற்றுலா வந்ந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்