ஈரானின் பதிலடித் தாக்குதல் - பதுங்கிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
14 ஆனி 2025 சனி 04:49 | பார்வைகள் : 1822
ஈரானின் பதிலடித் தாக்குதல்களுக்குப் பிறகு இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஆகியோர் ஒரு பதுங்கு குழிக்குள் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேலின் குஷ் டான் பகுதியில் நடந்த ஏவுகணைத் தாக்குதல்களில் குறைந்தது 34 பேர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலிய அவசர சேவை மேகன் டேவிட் அடோம் (MDA) தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஒரு பெண் ஆபத்தான நிலையில் உள்ளதோடு மேலும் ஒரு ஆண் படுகாயமடைந்துள்ளார் என்று MDA மேலும் கூறியது.
டெல் அவிவ் மற்றும் ராமத் கான் ஆகியவற்றை உள்ளடக்கிய குஷ் டான், இஸ்ரேலின் மிகப்பெரிய பெருநகரப் பகுதியாகும்.
இஸ்ரேல் வெள்ளிக்கிழமை காலை மேற்கொண்ட தாக்குதலுக்கான ஈரானின் “தீவிர பதிலடி நடவடிக்கையின் தொடக்கம்” என விளக்கப்பட்டுள்ளது.


























Bons Plans
Annuaire
Scan